எமது நண்பனுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம்- சூசை மைந்தர்கள்
யாழ் மண்ணில் பிறந்து
சூசையின் மைந்தனாய் இணைந்து
வாழ்வின் இனியன பலவும் கடந்து
எம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் இணைந்து
உன் நினைவு மட்டும் எஞ்சிட
வாழ்வின் நிலையாமை பாடம் சொல்லித்தர
நிஜத்தில் நீ இல்லாது போகவேண்டுமா...?
நீ அங்கே தனிமையில் தவிக்க
நாம் இங்கே ஏங்கி நிற்க
எம்மை விட்டு சென்றாயோ நண்பா...
கால் நூற்றாண்டு கடந்து
பல கலைகளும் கற்று
பல்கலையும் சென்று
உன் கனவெல்லாம் நிஜமாக தொடங்கிய நேரம்
உன் வாழ்விற்கு முற்றுபுள்ளி - ஆனால்
எம் வாழ்வில் அது கண்ணீர் துளி...
காலம் நாம் செய்த ரகளைகள்
இன்று நினைவுகளாய்
கண்ணில் நீர்த்திவலைகள்
வெறும் நிழல்கள் மட்டும் இங்கிருக்க
எம்மையெல்லாம் விட்டு
நீ அவ்வழி சென்றதுமேனோ...?
சிறகு முளைத்து நீ பறக்க தொடங்கியதும்
எமன் செய்த சதியோ - இல்லை
அவன் எழுதிய விதியோ
பாதி வழி கடந்து
கரையை கடக்க முன்
உன்னை நோய் கொண்டு போனதும் ஏனோ...
எமக்கு பொக்கிஷமாய்
கிடைத்த உன் நட்பு
அவன் தனக்கும் வேண்டுமென்று
உன்னை பாதியில் எடுத்து கொண்டானோ...
உன் வாழ்வின் கடைசி தருணம்
உன் நோயறியாது - நீ பட்ட வேதனைகளோ
என்பும் உருகும் வலிகளுமோ
சொல்லிலடங்கா துயரங்கள்...
நீ படும் வேதனை கண்டு
மரணம் உன்னை தழுவியதோ...?
தினம் தினம் வலியில் உயிர்
போவதன்றி நிரந்தரமாய் அது பிரிந்ததுவோ...?
மீண்டும் வருவாயோ
எம்முடன் நீ இணைவாயோ
இலட்சிய பாதையை தொடர்வாயோ
என ஏங்கி நிற்கிறோம் நண்பா...
Thanks Sathis...
ReplyDeleteV miss him lot...
நன்றிகள் துசி அருள், ரேகன் நிமல்
ReplyDeleteஎதிர்பாராத அஸ்தமனங்கள்,
ReplyDeleteபுலர பிந்தும் விடியல்களின்
தொகுப்பு இந்த வாழ்வு...
வாழ்வின் ஒரு சக பயணியாய் நண்பன் நொயலின் இழப்பு எல்லோரையும் பாதித்து இருக்கிறது..